Monday, February 6, 2017

எந்த தேர்வாகிலும், தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும்

எந்த தேர்வாகிலும், தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் அவர் சொன்ன ‘6 R’-களை அதாவது Read, Remember, Reproduce, Refer, Rectify, Revise ஆகிய சூட்சுமங்களை அனைவரும் மிகுந்த கவனத்தோடு குறிப்பெடுத்துக்கொண்டனர்.....

ஒருமுறை படி, அதை ஒன்பதுமுறை திரும்பத் திரும்ப எழுதிப்பார், எழுதியதை உன் நினைவில் பதிந்ததா என்பதை சோதித்துப்பார், விடுபட்டுப்போன குறை நிறைகளைத் திருத்திக்கொண்டு... நீ படித்து தெரிந்துகொண்டதை முகம்பார்க்கும் கண்ணாடி முன்பு நின்று உனக்கு நீயே பாடம் நடத்தி ஒப்பிட்டுப்பார் ... இனி நீ எந்த தேர்வையும் எழுத சென்றுவா ... வென்றுவா ... அனைத்திலும் வெற்றிவாகை சூடிவா ....... (கோகி).
பாடலைக் கேட்டு உள்ளம் மகிழ்வோம், உவகையில் நிறைவோம்!!!!
"சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - மகனே
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை- இந்த
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா ...."